A comprehensive history of Sri Lanka in Tamil
இலங்கையின் அமைவிடம்
இலங்கையின் பரப்பு
இலங்கையின் தேசிய அம்சங்கள்
இலங்கை அரசியல் பற்றிய சில பொதுவான தகவல்கள்,
இலங்கை பற்றிய சில பொதுவான தகவல்கள்,
வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளைக் கவர்ந்த ஒரு நாடாகும். இலங்கை 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவாகும். இந்தியாவின் தென்முனைப்பகுதியில் இது அமைந்துள்ளது., இதன் சிறப்பான அமைவிடமானது பல நூற்றாண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் இலங்கையை மிகவும் பிரபலமான ஒரு இடமாக ஆக்கியுள்ளது.வளைகுடாப் பிராந்தியத்தின் எல்லாப் பிரதான நகரங்களில் இருந்தும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலிருந்தும் இலங்கைக்கான விமானப் பயண நேரம் மூன்றரை மணித்தியாலங்கள் மட்டுமே மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தகப் பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது.
நாட்டின் தென்பகுதி பொன்நிறமான கடற்கரையையும், மத்திய பகுதி பனிபடர்ந்த மலைகளையும் கொண்டுள்ளது. இவை தவிர சிதைந்து போன கலாசார முக்கோணங்கள், கன்னிமலைக்காடுகள், பசுமையான புல்வெளிகளும், வயல்வெளிகளும் இலங்கையின் அழகுக்கும், எழிலுக்கும் மெருகு சேர்ப்பதோடு இந்த மிதமிஞ்சிய எழில் கொஞ்சும் இயற்கை அழகுகள் காரணமாக உண்மையிலேயே ஒரு சொர்க்கபுரித்தீவாக இலங்கை உலகில் இடம்பிடித்துள்ளது.
ஓய்வுக்காக இலங்கைக்கு விஜயம் செய்கின்றவர்களுக்கு இலங்கை மக்களின் விருந்தோம்பல் உண்டையிலேயே அவர்களின் பயணத்தைப் பெறுமதிமிக்கதாக்குகின்றது.வர்த்தகப் பயணிகளுக்கு செறிவான கைத்தொழில் பிரிவுகளும், சிறிய கைத்தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு ஆற்றல் மிக்க வர்த்தகத் தொடர்புடன் கூடிய கல்வியறிவு மிக்க மக்களும் கவனத்தை ஈர்க்கும் அம்சங்களாகும்.
தொழில் பயிற்சி ஆற்றல் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை ஏன் இலங்கையிலிருந்து தெரிவு செய்ய வேண்டும்?
பாரம்பரிய தொழில் ஆற்றல்
ஸ்தூபிகள்,கோபுரங்கள்,மடாலயங்கள்,மாளிகைகள்,நீர்பாசனத்திட்டங்கள் (குளங்கள்) என்பனவற்றின் சிதைவுகள் பண்டைய இலங்கையின் பொறியியல் தொழில் ஆற்றல்,செழுமையான வளங்கள் மற்றும் சாமர்த்தியம் என்பனவற்றுக்குச் சான்றாக அமைந்துள்ளன.இந்தத் தொழில் ஆற்றலாானது தலைமுறை தலைமுறையாகக் கடந்துவந்து ,தற்போது மேலதிக நவீன தொழில் நுட்பத்தால் பட்டைதீட்டப்பட்டுள்ளது.
உயர் எழுத்தறிவு மட்டம்
இலங்கையில் இரண்டாம் (ஆண்டு13) மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி மட்டத்தோடு ஆற்றலும்,பயிற்சியும் கொண்ட மனிதவலுவுடன் கூடிய பாரிய அளவிலான வெளியீடுகள் உள்ளன. நூற்றுக்கணக்கான ஏ தரம் கொண்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் வலைப்பின்னலூடாக உயர்மட்டக் கல்வி பேணப்படுகின்றது. இங்கு எழுத்தறிவு வீதம் 92 ஆக இருப்பது ஆசியாவில் மிகவும் உயர்மட்டத்தில் ஒன்றாகும்.
விரைவாகப் படிப்பதகான இயல்பூக்கம் மற்றும் இலகுவாக இசைவாக்கம் பெறல்
இலங்கையர்கள் இயல்பாகவே விவேகமானவர்கள் தொழில்தன்மையுடையவர்கள்,கடின உழைப்பாளிகள் மற்றும் புதிய தொழில்களில் தம்மை இயல்பாகவே இசைவாக்கிக் கொள்ளக் கூடியவர்கள்,எந்தத் தொழில் தேவையையும் இலகுவாகவும்,விரைவாகவும் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.இவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களைத் திருப்திப்படுத்துகின்றன.சிறந்த விருந்தோம்பல் மற்றும் ,இயல்பான பெருந்தன்மை என்பன இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாடுகளில் தொழில் செய்யும் இடங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலைமைகளுக்கும் விரைவாகவே பரிச்சயமடைய செய்கின்றன.அவர்கள் தொழில் திருப்தியை இலகுவாகப் பெற்றுக் கொள்கின்றனர்.அத்தோடு மகிழ்ச்சியும் அடைகின்றனர்.இவை வெற்றிகரமான தொழில் தருனர் மற்றும் தொழிலாளி உறவுகளுக்கு மிகவும் அவசியமானவை.இலங்கையர்கள் உறுதியான குடும்பத் தொடர்புகளையும் பேணிவருவதால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்பே வீடு திரும்ப ஆர்வம் கொண்டுள்ளனர்.
இலங்கை பற்றிய பொதுவான தகவல்கள்
தலைநகரம் :
ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே
வர்த்தகத் தலைநகரம் :
கொழும்பு
நாணயம் :
இலங்கை ரூபா
அரசாங்கம் :
சட்டவாக்க அதிகாரம் பாரளுமன்றத்துக் குரியது.விகிதாசாரதேர்தல் முறையிலான மக்கள் வாக்களிப்பின் மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்படுகின்றது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் மக்கள் வாக்கெடுப்பின் மூலமே தெரிவு செய்யப்படுகின்றார். பாதுகாப்புத்துறை உட்பட்ட நிறைவேற்று அதிகாரம் இவரிடம் உள்ளது.பல கட்சிமுறையைக் கொண்ட இலங்கையில் அரசாங்கம் ஆறுவருடங்களுக்கு ஒரு தடவை தெரிவு செய்யப்படுகின்றது.
தேசியக் கொடி:
இலங்கையின் தேசியக் கொடி வலது பாதத்தில் வாள் உடன் கூடிய பொன்நிறத்தினாலான சிங்கத்தின் உருவத்துடன் ,சிவப்பு நிற வர்ணப் பின்னணி,மஞ்சள் நிற கரை என்பனவற்றைக் கொண்டது.இதன் நான்கு முனைகளிலும் உள்நோக்கிச் சாய்ந்ததாக நான்கு அரச மர இலைகள் உள்ளன. நாட்டின் சிறுபான்மை இனக் குழுக்களைப் பிரதிபலிக்கும் வகையில் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தினாலான செங்குத்தான வாட்டிகள் கொடியின் முடிவில் காணப்படுகின்றன.இலங்கையின் கடைசி மன்னனின் நிலைப்பாட்டைத் தழுவியதாக இது அமைந்துள்ளது.
சனத்தொகை:
19 மில்லியன்
பிறப்பின் போதுஆயுள் எதிர்பார்க்கை:
பெண்கள் 74 ஆண்கள் 64.
எழுத்தறிவு வீதம்:
சிங்களம் மற்றும் தமிழ் பின்தங்கிய கிராமங்களைத் தவிர ஆங்கிலமும் பரவலாகப் பேசப்படும் ஒரு மொழியாகும்.
இனக்கலப்பு:
சிங்களவர்74%,தமிழர்கள்18%,முஸ்லிம்கள்7%,பறங்கியர் (டச்சு மற்றும் போர்த்துக்கேயர்களின் வழித்தோன்றல்கள்) மற்றும் ஏனையவர்கள் 1%.
சமயம்:
பௌத்தம் 70%,இந்துமதம்16%,கிறிஸ்தவம்7%,இஸலாம்7%
காலநிலை:
தாழ்நிலம்-வெப்பமண்டலம் சராசரி உஷ்ணம் 27 சென்ரிகிரேட்
மத்தியமலை நாடு-குளிர்பிரதேசம் உஷ்ணநிலை 14 சென்ரிகிரேட்டாக குறையும்.இயல்புடையது.தென்மேற்கு பருவகால மழை மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேற்கு,தெற்கு மற்றும் மத்தியப் பிரதேசங்களில் பெய்யும்.வடகிழக்கு பருவ மழை டிசம்பர் ஜனவரி மாதங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்யும்.
தொழிற்துறைகள்
இறப்பர்,தேயிலை,தென்னை என்பன பிரதான தொழிற்துறைகள் அத்தோடு விவசாய உற்பத்திகள், ஆடைத்தொழில், சீமேந்து, பெற்றோலியம்சுத்திகரிப்பு, ஜவுளி,புகையிலைத் தொழிற்துறைகளும்.
விவசாய உற்பத்திகள்:
அரிசி, கரும்பு, தானியங்கள், பருப்புவகைகள், எண்ணைவிதைகள், கிழங்குவகைகள், நறுமணத்திரவியங்கள், தேயிலை, இறப்பர், தென்னை, பால்முட்டை, மிருகத்தோல் மற்றும் இறைச்சிவகைகள்.
Comments
Post a Comment