assembly of god vs salvation army's doctrines diffrents
இன்று நாம் இருபத்தோராம் நூற்றாண்டில் கால்பதித்துள்ளோம். எத்தனையோ மாற்றங்கள் நம் விழிகளுக்கு முன்னே கடந்து செல்கின்றன. மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சிலவற்றை எம்மால் மாற்ற முடியாது. ஏனெனில் அவைகள் அதன் தரத்தையும் கீர்த்தியையும் தலை நிமிர்ந்து நீடிக்க செய்கின்றன. ஒரு ஆலயமோ அல்லது கட்டிடமோ, நிறுவனமோ தன் தரத்தையம் நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொள்ள அநேக அதன் அஸ்திபாரத்தை சமூலமும் உறுதியாக பேணி பாதுகாக்கின்றன. இதன் விளைவாக மக்கள் மத்தியிலே நல்வரவேற்ப்பையும் பெறக்கூடியதாயுள்ளன.
சரி இனியும் காலம் தாழ்த்தாது அந்த பதினாறு உபதேசங்கள் இரட்சண்ய சபையோடு ஒப்பிட்டுப்பார்ப்போம்.
அசெம்பிளி ஒப் கோட் 01. வேதாகமம் ஏவப்பட்டது. |
இரட்சணிய சேனை 01. வேதாகமம் ஏவப்பட்டது. |
வேதாகமம் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டது . மேலும் இது மாறாதது, நம்பத்தன்மையுடையது. மாடு வாழ்க்கையின் விசுவாசத்திற்கான தெய்வீக அதிகார வழிகாட்டியும் வாழ்க்கை முறையுமாகும். இது தவறற்றதும் அதிகாரப்பூர்வமுடையதுமான எல்லா வேத வாக்கியங்களும் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டது.
|
பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் வேதாகமம் ஆண்டவரால் வழங்கப்பட்டன, மேலும் அவை கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் கிறிஸ்தவர்களின் விழுமியங்களை கடையிடுக்க உதவுகின்றன. பரிசுத்த ஆவியால் எழுதப்படவில்லை |
2. ஒரே மெய் தேவன் |
2. ஒரே மெய் தேவன் |
ஒரே ஒரு தேவனுள்ளார். அவர் தாபரிப்பதற்கும் வெளிப்பிரகாரமான எந்த ஒத்தாசையும் முகவரும் இல்லாமல் செயல்படக்கூடியவர். பாவத்திலிருந்து மனிதர்களை இரட்சிக்க வந்தவர். இவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியெனும் மூன்று ஆள்த்துவமுடையவர். இவ்வாரான ஆள்த்துவத்தை திருத்துவம் என குறிப்பிடுவர். |
கடவுளில் மூன்று நபர்கள் உள்ளனர் - பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி, ஒருவராலும் பிரிக்கப்படாத சக்தி மற்றும் மகிமையில் இணையானவர்கள். |
3. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூரண தேவன் |
3. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பூரண தேவன் |
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தேவா குமாரன். அவருக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை. பரிசுத்த ஆவியினால் கர்பந்தரிக்க பெற்று ம்,ஆரியால் எனும் கன்னியின் வயிற்றில் பிறந்தவர். இவர் ஒருவரே பூமியில் மனிதனாக வாழும் போது எந்தவொரு பாவமும் செய்யாமல் பூரணமாகே பரிசுத்தமாக வாழ்ந்தார். மேலும் இவரே உன்னதமான தேவனுடைய குமாரன்.
|
கடவுளின் நித்திய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைவிசுவாசிக்கிறோம்., பரிசுத்த ஆவியால் கருவுற்றவர், மரியாளால் பிறந்தார். அவருக்குள் மனிதமும் தெய்வமும் ஒன்று சேர்ந்துள்ளது. அவர் ஒரு பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தார், தேவா சித்திதிற்காக மரணம் அடைந்தார், மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார் மற்றும் (பிதாவின்)தந்தையின் வலது பாரிசத்தில் வாழ்கிறார்; அவர் தனது ஜனங்களுக்காக பரிந்துவிண்ணப்பம்பண்ணுவர் , மேலும் அதிகாரத்திலும் மகிமையிலும் எப்போதும் இருப்பவர்.
|
04. மனித வீழ்ச்சி |
04. மனித வீழ்ச்சி |
அழகும் தேவா சாயலில் படியும் மனிதனை சிருஷ்டித்தார். ஆனாலும் மனிதனோ தேவன் செய்ய வேண்டாமென கூறிய காரியத்தை செய்தான். (ஆதி 3ம் அதிகாரம்). இதனால் தேவனிடத்திலிருந்து பெரிய பிளவு ஏற்ப்பட்டு ஆவிக்குரிய மரணத்தையும் சந்திக்க நேரிட்டது. அது முதற்கொண்டு மனிதனுடைய எண்ணங்கள் மற்றும் செயல்களில் தீமைகள் குடிகொண்டன. |
நமது முதல் பெற்றோர்கள் குற்றமற்ற நிலையில் படைக்கப்பட்டனர், ஆனால் அவர்களின் கீழ்ப்படியாமையால் அவர்கள் தங்கள் தூய்மையையும் மகிழ்ச்சியையும் இழந்தனர், மேலும் அவர்களின் வீழ்ச்சியின் விளைவாக அனைத்து மனிதர்களும் பாவிகளாகி, முற்றிலும் சீரழிந்து, கடவுளின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். |
05. மனிதனின் இரட்சிப்பு |
05. மனிதனின் இரட்சிப்பு |
இரட்சிப்பின் கோட்பாடு நம் வாழ்வில் பாவத்தின் மீது கடவுளின் வெற்றியை அறிவிப்பதன் மூலம் நமது கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாக அமைகிறது. இந்த உண்மை விடுதலை, குணப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு வாழ்க்கையை விளைவிக்கிறது. ஒரு புதிய உறுப்பினராக இருந்தாலும் சரி அல்லது முதிர்ந்த கிறிஸ்தவராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு விசுவாசியும் இரட்சிப்பு மற்றும் இந்த உண்மை நம் வாழ்விலும் தேவாலயங்களிலும் ஏற்படுத்தும் வித்தியாசத்தைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.
|
இரட்சிப்புக்கு கடவுளிடம் மனந்திரும்புதல், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் மற்றும் பரிசுத்த ஆவியின் மறுபிறப்பு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் பிறகே முழுமையான இரட்சிப்புக்குள் மனிதன் வருவான். |
6. சபையின் சட்டங்கள் |
6. சபையின் சட்டங்கள் |
இதில் இரண்டு விடயங்கள் அடங்கும். 1. ஞானஸ்நானம் 2. இராப்போஜனம் ஞானஸ்நானம் பெறுவது வேதவசனங்களால் கட்டளையிடப்பட்டுள்ளது. மனந்திரும்பி, கிறிஸ்துவை இரட்சகராகவும் ஆண்டவராகவும் நம்புகிற அனைவரும் ஞானஸ்நானம் பெற வேண்டும். இவ்வாறு தாங்கள் கிறிஸ்துவோடு மரித்தோம் என்றும், வாழ்வின் உல்லா சூழ்நிலையிலும் நடக்க அவரோடு உயிர்த்தெழுந்தோம் என்றும் உலகுக்கு அறிவிக்கிறார்கள். அப்பமும் திராட்சைக் திராட்சை ரசமும் அடங்கிய இறைவனின் இராப்போஜனம், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் (2 பேதுரு 1:4) தெய்வீக இயல்பைப் பகிர்ந்துகொள்வதை வெளிப்படுத்தும் அடையாளமாகும் (2 பேதுரு 1:4), அவருடைய துன்பம் மற்றும் மரணத்தின் நினைவுச்சின்னம் (1) கொரிந்தியர் 11:26 ), மற்றும் அவரது இரண்டாம் வருகையைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனம் (1 கொரிந்தியர் 11:26 ), மேலும் "அவர் வரும் வரை!" |
மற்ற கிறிஸ்தவ பிரிவுகளைப் போலல்லாமல், இரட்சணைய சேனை ஞானஸ்நானம் மற்றும் இராப்போஜன சடங்குகளைக் கடைப்பிடிப்பதில்லை. சடங்குகளின் தேவையின்றி, சடங்குகள் வெளிப்புற அடையாளங்களாக இருக்கும் அவைகளின் உள்நோக்கிய கருத்துக்களை அனுபவிக்க முடியும் என்று இரடசண்ய சேனை நம்புகிறது.
|
07. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் |
07. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் |
இது முக்கிய உபதேசங்கள் நான்கில் ஒன்று. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளையின்படி, பரிசுத்த ஆவியிலும் அக்கினியிலும் ஞானஸ்நானம் பெறுவதற்கு, பிதாவின் வாக்குறுதியை ஆர்வத்துடன் எதிர்பார்க்கவும் ஆர்வத்துடன் தேடவும் அனைத்து விசுவாசிகளுக்கும் உரிமை உண்டு. ஆரம்பகால கிறிஸ்தவ திருச்சபையில் இதுவே சாதாரண அனுபவமாக இருந்தது. அதனுடன் வாழ்க்கை மற்றும் ஊழியத்திற்க்கான அதிகாரம், வரங்களை கிரியை செய்தல்; மற்றும் ஊழியத்தின் உல்லா கட்டங்களிலும்; அவற்றின் பயன்பாடு மிக முக்கியமாக உள்ளது.
|
இவர்கள் விசுவாசிக்கிறார்கள். ஆயினும் கிரியையில் அது ஆதித்திருச்சபையில் மாத்திரமே காண்படுகின்றன. தற்பொழுது நடைமுறையில் இலைலையென நம்புகின்றோம். |
08. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானததின் வெளிப்பiயான அடையாளம் |
08. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானததின் வெளிப்பiயான அடையாளம் |
இவ் உபதேசத்தின் முக்கியத்துவம்: பரிசுத்தஆவியின் வெளியான அடையாளமாக கிறிஸ்துவின் குணாதிசயம் மற்றும் ஆவியின் கனிகளே அந்நிய பாஷைகளை பேசுதலைப் பார்க்கிலும் சிறந்த சான்றுகள் என சில கிறிஸ்தவர்கள் போதிக்கின்றனர். அந்நியபாஷை பேசுதலே பரிசுத்த ஆவியானவரின் ஞானஸ்நானத்தின் நிரப்புதலின் வெளியான அடையாளம் என்பதே பெந்தகோஸ்த நிலைப்பாடும். இது இரட்சிப்பிலிருந்து வேறுபட்டதுமாகும். பரிசுத்தஆவியின் நிரப்புதலின் இவ் விசுவாசம் அப்போஸ்தலர் புத்தகத்தில் (2,8,9,10,19) ஆகிய அதிகாரங்களில் ஐந்து இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வசன அடிப்படையில் ஞானஸ்நானத்தின் மாதிரி வேறான ஒரு கிரியை என்பது அசெம்பிளீஸ் ஒப் கோட்டின் விசுவாசம். இது எப்பொழுதும் வெளியான அடையாளமாகிய அந்நிய பாஷைகளை பேசுதலை கொண்டதான ஒரு வெளியான அனுபவம். பாவத்தை உணர்த்தவும் கிறிஸ்துவை குறிப்பிடவும் இரட்சிப்பின் அனுபவம் முதல் பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு கிறிஸ்தவனிலும் இருக்கின்றார் என்பது உண்மை, பரிசுத்த ஆவியானவரின் இக்கிரியையானது ஞானஸ்நானத்திலும் வித்தியாச மானது. புரிந்துகொள்ளாமை, பயம் அல்லது போதனைக் குறைவாகிய பெந்தகோஸ்தவம் அல்லாதவர்கள் இந்த அருமையான வரத்தை பெற தங்களை விட்டுக்கொ டாமை துக்கமான விடயமாகும். இதை ஒரு வரமாக அதன் மதிப்பு மற்றும் பாவனைக்கு முன்பதாக இதை தனிப்பட்ட விதத்தில் உணர வேண்டும். இது முற்றிலும் தங்களை பரிசுத்த ஆவியானவரின் பாத்திரமாக விட்டுக் கொடுப்பவர்கள் மாத்திரம் பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்தை பெற்று அந்நிய பாஷையை பெறுவர்.
|
இவர்களும் இப்படியே ஆயினும் அந்நியபாஷையை சிலர் ஏற்றுக்கொள்வர். சிலர் மறுப்பர். ஆனாலும் ஆவியன் கனிகள் கிரியைச் செய்தல் இங்கும் கட்டாயமாகும். |
9. பரிசுத்தமாகுதல் |
9. பரிசுத்தமாகுதல் |
பரிசுத்தமாகுதல் என்றால் தீமைக்கு எம்மை விலக்கி சரியானதும், நேர்த்தியானதும், நெறிசார்பாக தங்களை தேவனுக்கென வேறுபடுத்தியதும் நடைபெறும் ஒரு படிமுறையாகும் 12:1.2. (ரோமர்13:12). தேவன் சுத்தமுமானவைகளே. கிறிஸ்தவர்கள் முறையான 1தெசலொனிக்கேயர் 5:23, எபிரேயர் பரிசுத்தராகையால் நாமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என வேதம் கூறுகின்றது. "பரிசுத்தமில்லாமல் ஒருவரும் தேவனை தரிசிப்பதில்லை" (எபிரேயர் 12:14). பரிசுத்தாவியானவரின் வல்லமையினால் பரிசுத்தமாய் வாழ முடியும்.
|
இதையும் இவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். |
10. சபையும் அதன் பணியும் |
10. சபையும் அதன் பணியும் |
வேதாகமம் கூறுவதுபோல். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து தங்கள் பாவத்திலிருந்து விடுவிக்கப் பட்டவர்களையே சபை கொண்டுள்ளது. எல்லைகள், வயது, இனம், பால், அல்லது நிறுவன வேற்றுமையின்றி சபை எல்லா கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. இது ஆவியானவர் மூலம் தேவன் வாசம் செய்யும் பரிசுத்த கிறிஸ்துவின் சரீரம். கிறிஸ்துவே சபைக்கு தலையானவர். சபை பிரதான கட்டளையை நிறைவேற்ற தேவையான அனைத்தையும் அவர் அளித்துள்ளார் (மத்தேயு 28:19, மாற்கு 16:15).ஒவ்வொரு கிறிஸ்தவனும் சபையின் அங்கம். உண்மையான விசுவாசிகளின் பெயர்கள் ' (சபையாயிருப்பவர்கள் பரலோகத்தில் எழுதியுள்ளது (எபேசியர் 1:22-23, 2:22, எபிரேயர் 12:23). மனித வர்க்கத்தை குறித்த தேவனுடைய நோக்கம் (1) பாவத்தில் வீழ்ந்தவர்களை தேடி இரட்சிப்பது (லூக்கா 19:10), (2) எல்லா மனுஷராலும் ஆராதிக்கப்படல் (வெளிப்படுத்தல் 19:10, 22:9), மற்றும் (3) அவருடைய குமாரன் இயேசுவைப் போல் விசுவாசமும் அறிவும் கொண்ட முதிர்ச்சியுள்ள விசுவாசிகளால் ஒருங்கிணைந்த சரீரத்தை கட்ட (எபேசியர் 4:12). ஆகையால், சபையின் அங்கமாக அசெம்பிளீஸ் ஒப் கோட் சபையாக இருப்பது: 1. உலகிற்கு நற்செய்தி அறிவிக்கும் தேவனுடைய முகவர்களாயிருக்க (அப்போஸ்தலர் 1:8, மத்தேயு 28:19-20, மாற்கு 16:15-16). 2. மனிதன் தேவனை ஆராதிப்பதற்கான ஐக்கியசரீரமாயிருப்பதற்காக (1கொரிந்தியர் 12:13). 3. அவருடைய குமாரனின் சாயலுக்கு ஒப்பான பூரண சரீரத்தை கட்டும் கருவியாக அமைய (எபேசியர் 4:11-16, 1கொரிந்தியர் 12:28, 14:12), 3. சபையின் இம் மும்முனை பணியை நிறைவேற்ற, புதிய ஏற்பாட்டின் மாதிரிப்படி அசெம்பிளீஸ் ஒப் கோட்டின் அங்கத்தவர்கள் பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்தால் நிரப்பப்பட்டு ஊக்குவிக்கப் படுகின்றனர். இவ் அனுபவத்தின் மூலமாக விசுவாசிகள்: ஆவியானவரின் பலத்தோடு இயற்கைக்கு மேலான அடையாளங்களோடும் 4:29-31, எபிரேயர் 2:3-4). தேவனை ஆராதிக்க ஏற்பாட்டின் மாதிரிப்படி வரங்கள். கனிகள், ஊழியங்கள் (1கொரிந்தியர் 12:28, 14:12, கலாத்தியர் 5:22-26, எபேசியர் 4:11-12, கொலோசியர் 1:29). சுவிஷேசம் அறிவிக்க (மாற்கு 16:15-20, அப்போஸ்தலர் (1கொரிந்தியர் 2:10-16, 12:14), மற்றும் பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு மாறுத்தரமாக புதிய மூலம் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையை கட்ட என்பவைகளுக்கே ஆகும்.
|
இவர்களும் இதை கடைபிடிக்கிறார்கள். இன்று உலகெங்கிலும் போய் நற்செய்திபரப்புதல்இ ஏழைகளுக்கு உதவி செய்தல் என்பன இங்கு காணப்படுகி;றன. |
11. ஊழியம் |
11. ஊழியம் |
உன்னத அழைப்பிற்கு மாறுத்தரம் செலுத்தி ஊழியத்தில் ஈடுபாடுகொள்வது வேதாகமத்தின் நியதி. இது மும்முனை நோக்கில் சபையை வழி நடத்த (1) உலகிற்கு சுவிஷேசம் அறிவிக்க (மாற்கு 16:15-20), (2) தேவனை ஆராதிக்க (யோவான் 4:23-24), மற்றும் (3) கிறிஸ்துவின் சிந்தையைப் போன்ற விசுவாசிகளின் சரீரத்தை கட்ட (எபேசியர் 4:11,16) கர்த்தரால் கொடுக்கப்பட்டது.
|
இரட்சண்ய சேனையானது இதை விசுவாசிக்கிறது. மேலும் தை அவர்கள் மிக முக்கிய காரியமாக மதிக்கிறார்கள். |
12. தெய்வீக சுகமளித்தல் |
12. தெய்வீக சுகமளித்தல் |
தெய்வீக சுகமளித்தல் சுவிஷேசத்தின் பகுதியாக தேவனிடமிருந்து வருகின்றது. பாவப் பரிகாரத்தில் ஒப்புரவாக்கும்படி கிறிஸ்து பாடுபட்டு மரித்தபோது) வியாதிக்கான விடுதலை (தேவனோடு எம்மை அளிக்கப்பட்டாயிற்று. சுகமளித்தல் எல்லா விசுவாசிகளதும் சந்தர்ப்பமாகும் (ஏசாயா 53:4-5, மத்தேயு 8:16-17, யாக்கோபு 5:14-16). |
இயேசு தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின்போது, சுகப்படுத்துதலைத் தம்முடைய ஊழியத்தின் மையப் பாகமாக்கினார். அவர் எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தினார், மரணம் தருவாயில் கூட, சில சமயங்களில் ஒரு நபரைத் தொட்டு ஒரு வார்த்தை பேசுவதன் மூலம். அநேகரை இயேசு சுகமாக்கினார். இயேசு சீடர்களை உலகத்திற்கு அனுப்பியபோது (மாற்கு 6:7) அவர்களுக்கு மூன்று பணிகள் கொடுக்கப்பட்டன: பிரசங்கம், கற்பித்தல் மற்றும் குணப்படுத்துதல். அப்போதிருந்து 2,000 ஆண்டுகளில், கிறிஸ்தவர்கள் ஆரோக்கியம், குணப்படுத்துதல் மற்றும் முழுமையுடன் நெருக்கமாக ஈடுபட்டுள்ளனர்.
|
13. மகிமையின் நம்பிக்கை |
13. மகிமையின் நம்பிக்கை |
கிறிஸ்துவில் நித்திரையடைந்தவர்களின் உயிர்த்தெழுதலும், உயிருடன் இருப்பவர்களுடன் சேர்ந்து அவர்கள் மறுரூபமாக்கப்படுவதும், கர்த்தருடைய வருகையில் நிலைத்திருப்பதும் திருச்சபையின் விசுவாசம் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட மகிமையின் நம்பிக்கையாகும். |
அனைத்து விசுவாசிகளும் முழுவதுமாக பரிசுத்தமாக்கப்படுவது சிறந்த காரியம் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் அவர்களின் முழு ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை வரை குற்றமற்றதாக பாதுகாக்கப்படும் என்றும் அவருடைய வருகையில் சேர்த்துக்கொள்ளப்படும் என்பதுமே ஆகும்.
|
14. கிறிஸ்துவின் ஆயிரம் வருட அரசாட்சி |
14. fpwp];Jtpd; Mapuk; tUl
murhl;rp |
கிறிஸ்துவின் இரண்டாவது வருகை கிறிஸ்தவர்களை எடுத்துக் கொள்ளவும், அது மகிமையின் நம்பிக்கை, அதைத் தொடர்ந்து 1000 வருடம் பூமியில் ஆட்சி செய்ய பரிசுத்தவான்களோடும் கூட கிறிஸ்துவின் பகிரங்க வருகை நடைபெறும் (சகரியா 14:5, மத்தேயு 24:27,30, வெளிப்படுத்தல் 1:7, 19:11-14, 20:1-6). ஆயிரம் வருட ஆட்சியில் இஸ்வேலர்களுக்கான தேசிய இரட்சிப்பும் (எசேக்கியேல் 37:21-22, செப்பனியா 3:19-20, ரோமர் 11:26- 27), அனைத்துலக சமாதானமும் அளிக்கப்படும் (சங்கீதம் 72:3-8, ஏசாய் 11-9, மீகா 4:3-4). |
இதைக் குறித்த சரியான விளக்கம் இல்லாமை. |
15. இறுதி நியாயந்தீர்ப்பு |
15. இறுதி நியாயந்தீர்ப்பு |
துன்மார்க்க மரித்தவர்கள் உயிர்த்தெழுப்பப்பட்டு, அவர்களுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கப்படும் ஒரு இறுதித் தீர்ப்பு இருக்கும். பிசாசு மற்றும் அவனுடைய தூதர்கள், மிருகம் மற்றும் பொய்யான தீர்க்கதரிசி ஆகியோருடன் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டதாகக் காணப்படாத எவரும், இரண்டாவது மரணமாகிய தீ மற்றும் கந்தகத்தால் எரியும் ஏரியில் நித்திய தண்டனைக்கு அனுப்பப்படுவார்கள். |
இதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளுகிறரர்கள். |
16. புதிய வானம் புதிய பூமி. |
16. புதிய வானம் புதிய பூமி. |
புதிய வானம் புதிய பூமி "தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கு இணங்க நீதிமான்கள் என்றென்றும் வாசம் செய்யும் புதிய வானம் புதிய பூமியை நாம் நோக்கிக் கொண்டிருக்கின்றோம் (2பேதுரு 3:13, வெளிப்படுத்தல் 21,22). மத்தியில் எம்மை தைரியப்படுத்துகின்றது. இயேசு இவ் உபதேசத்தின் முக்கியத்துவம்: அவருக்கு உண்மையாய் இருக்கும் பிள்ளைகளுக்கு அவர் ஆயத்தம் செய்யும் அவருடைய வாக்குத்தத்த விடயம் எமது பாடுகள் மற்றும் நெருக்கடிகளின் சீஷர்களுக்கு கூறினார். எல்லா சந்ததியின் கிறிஸ்தவர்களுக்கும் வாக்குத்தத்தத்தை ஏற்படுத்தினார். என்னவெனில், "உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்ய போகின்றேன். நான் போய் உங்களுக்கு ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணியதும், நான் வந்து நீங்களும் என்னோடு இருக்கும்படி உங்களை (யோவான் 14:2-3). கூட்டிச் செல்வேன்"
|
இதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளுகிறரர்கள். ஆனாலும் இதைக்குறித்து சரியான விளக்கம் இல்லை. |
சால்வேஷன் ஆர்மி இரட்சணிய சேனை
(சால்வேஷன் ஆர்மி) இரட்சணிய சேனை , வில்லியம் பூத் என்பவரால் நிறுவப்பட்டது, அவர் 1865 இல் லண்டனின் கிழக்கு முனையில் ஒரு சுவிசேஷ ஊழியத்தைத் தொடங்கினார், அவர் ஏழைகளுக்கும் திக்கற்ற பிள்ளைகளுக்கும் உணவளிப்பதற்கும் தங்குவதற்கும் (மிஷன் நிலையங்களை) விடுதிகளை நிறுவினார். மற்றும் 1878 இல் தனது அமைப்பின் பெயரை (சால்வேஷன் ஆர்மி) இரட்சணிய சேனை என்று மாற்றினார். அவரும் அவரது தமையன் வில்லியம் ப்ராம்வெல் பூத்தும் படிப்படியாக சபையை ஒரு இராணுவ வடிவில் நிறுவினர், மூத்த பூத் வாழ்நாள் முழுவதும் ஜெனரலாக இருந்தார். இது பிரிட்டனில் விரைவாக பரவி பின்னர் சர்வதேச அளவில் விரிவடைந்தது.
இரண்டு அந்நாட்டு இராணுவ பிளவுகள் சபையை ஆரம்ப ஆண்டுகளில் உலுக்கியது. 1884 இல் அமெரிக்க அமைப்பு ஜெனரல் பூத்தின் சுதந்திரத்தை நிறுவ முயன்றது. இராணிவதிலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், அதன் தலைவர்கள் அமெரிக்க (சால்வேஷன் ஆர்மியை) இரட்சணிய சேனையை அமைத்தனர், அது விரைவில் நிராகரிக்கப்பட்டது. 1896 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள ஜெனரல் மற்றும் தேசிய தளபதியின் மற்றொரு மகன் பாலிங்டன் பூத், ஒரு சர்ச்சைக்குப் பிறகு ராஜினாமா செய்து, அமெரிக்காவின் தன்னார்வலர்களை சேர்த்து சபையை அமைத்தார் .
இராணுவத்தின் அடிப்படைப் பிரிவானது லெப்டினன்ட் முதல் பிரிகேடியர் வரையிலான ஒரு அதிகாரியால் கட்டளையிடப்படும் வல்லமைமிக்க ஒரு அமைப்பு ஆகும். இவர்களுடைய சபையை சார்ந்த நாடுகள் பிரதேசங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன (பொதுவாக ஒரு பிரதேசம் என்பது ஒரு நாடு, அமெரிக்காவைத் தவிர, அங்கு நான்கு பிரதேசங்கள் உள்ளன).
இராணுவ கோட்பாடே ஆகும். இந்த சபையில் ஊழியர்களாக மாற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் இவர்களுடைய சட்ட விதிகளில் கையொப்பமிட வேண்டும் மற்றும் அவர்களின் சேவைகளை தன்னார்வமாக வழங்க வேண்டும். அதிகாரிகள் மற்ற புராட்டஸ்டன்ட் தேவாலயங்களின் ஊழியர்களுக்கு சமமானவர்கள். ஒவ்வொரு ஊழியருக்கும் பயிற்சி என்பது ஒரு வேதாம பள்ளியில் இரண்டு வருடக் குடியிருப்பும், அதைத் தொடர்ந்து ஐந்தாண்டுத் திட்டமான மேம்பட்ட படிப்பும். ஆண் ஊழியர்களுக்கு சமமாகவே பெண் ஊழியர்களுக்கும் முழுமையான சமத்துவம். கொடுக்கப்பட்டுள்ளது.
பூத்தின் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையுடன் சக மதகுருமார்கள் உடன்படாதபோது, அவரும் அவரது மனைவி கேத்தரினும் இங்கிலாந்து முழுவதும் சுவிசேஷகர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக தேவாலயத்திலிருந்து விலகினர். இந்த இரு தம்பதியினரும் 1865 இல் லண்டனின் கிழக்கு முனைக்குத் திரும்பியது, அங்கு பல போர்களில் இழந்த ஆண்கள் மற்றும் பெண்களின் ஆன்மாக்களுக்காக தங்கள் போராட்டத்தில் இணைந்தனர். 10 ஆண்டுகளுக்குள், "கிறிஸ்டியன் மிஷன்" என்ற பெயரில் இயங்கும் அவர்களின் அமைப்பு, 1,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களையும் சுவிசேஷகர்களையும் கொண்டிருந்தது.
திருடர்கள், விபச்சாரிகள், சூதாட்டக்காரர்கள் மற்றும் குடிகாரர்கள் ஆகியோர் முதலில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களில் அடங்குவர். விரைவில், அந்த மதம் மாறியவர்களும் கடவுளின் வல்லமை வாழும் ஜீவ சாட்சிகளாக தெருக்களில் பிரசங்கித்து வாழ்ந்தனர்;.
பூத் 1878 “கிறிஸ்தவ மிஷன்” ஆண்டு அறிக்கையின் அச்சுப்பொறியின் ஆதாரத்தைப் படித்தபோது, “கிறிஸ்டியன் மிஷன் ஒரு தன்னார்வப் படை" என்ற அறிக்கையை அவர் கவனித்தார். "தன்னார்வப் படை" என்ற வார்த்தைகளைக் கடந்து, “சால்வேஷன் ஆர்மி"யில் என்று அதை மாற்றி அமைத்தார். அந்த வார்த்தைகளில் இருந்து சால்வேஷன் ஆர்மியின் அடித்தள பத்திரத்தின் அடிப்படை வந்தது.
அப்போதிருந்து, மதம் மாறியவர்கள் கிறிஸ்துவின் படைவீரர்களாக ஆனார்கள், அன்றும் இப்போதும் இரட்சிப்புவாதிகள் என்று அறியப்பட்டனர். வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு மத்தியிலும் 1881 மற்றும் 1885 க்கு இடையில் 250,000 கிறிஸ்தவர்களை மதம் மாற்றிய பிரிட்டிஷ் தீவுகள் முழுவதிலும் அவர்கள் ஒரு தாக்குதலைத் தொடங்கினர். அவர்களின் செய்தி வேகமாக பரவியது, அமெரிக்காவிலும் கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் காலூன்றியது. , ஐஸ்லாந்து மற்றும் ஜெர்மனி.
இன்று, சால்வேஷன் ஆர்மி உலகின் ஒவ்வொரு மூலையிலும் செயலில் உள்ளது மற்றும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை செய்கிறது, கடவுளின் குணப்படுத்துதல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறது.
Comments
Post a Comment