Manipur Breaking News in Tamil
மணிப்பூர்ல் அமைதி திரும்பி வரும் நிலையில், உக்ருல் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர். லிட்டன் நகரம் அருகே உள்ள தோவாய்ஜ் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார். மலைப்பகுதிகள் நிறைந்த மணிப்பூரில், பெரும்பான்மையாக மெய்தி இன மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.
இதனால், மணிப்பூர் கடந்த மூன்று மாதத்திற்கும்
மேலாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மாநிலம் முழுவதும் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி நாட்டையை உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை
மணிப்பூர் போலீசார் கைது செய்தனர்.
அதன்பிறகு இதுகுறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அங்கு விரைவில் அமைதி திரும்பும் என்றார். இந்த நிலையில், மணிப்பூர் பாலியல் வன்முறை குறித்த வழக்குகளை விசாரிக்க 53 பேர் கொண்ட குழுவை சிபிஐ அமைத்துள்ளது. இந்தக் குழுவில் 29 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
மணிப்பூர் வன்முறை தொடர்பான 6 வழக்குகளை ஏற்கனவே சிபிஐ விசாரித்து வருகிறது. மணிப்பூரில் கடந்த இருவாரங்களாக ஓரளவு அமைதி ஏற்பட்டது. இயல்பு நிலைக்கு மாநிலம் படிப்படியாக திரும்பி வந்தது. இந்த நிலையில், உக்ருல் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
லிட்டன் நகரம் அருகே உள்ள தோவாய்ஜ் கிராமத்தில் இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை
ஏற்பட்டது.
அதிகாலையில் இருந்தே துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்டுக்கொண்டு இருந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர். பாதுகாப்பு படையினர் வந்த பிறகே, துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. மணிப்பூரில் இதுவரை 180 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Comments
Post a Comment