Seven Last Statements of Jesus In Tamil

 

இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள் 




1. ஒன்பதாம் மணி நேரத்தில், ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று இயேசு சத்தமிட்டதாக மத்தேயு 27:46 சொல்கிறது.

2. அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.  (லூக்கா 23:34).

3. இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (லூக்கா 23:43).

4.26 "ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் "அப்போஸ்தலனாகிய யோவானுடன் சிலுவையின் அருகே தம் தாயார் நிற்பதை இயேசு அறிந்தபோது, ​​அவர் தனது தாயின் வாழ்வை யோவானின் கையில்  ஒப்படைத்தார். (யோவான் 19:26-27).

5. தாகமாயிருக்கிறேன் என்றார். "எனக்கு தாகமாக இருக்கிறது" (யோவான் 19:28). இங்கே, சங்கீதம் 69:21-ல் உள்ள என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். என்ற தீர்க்கதரிசன வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.

6. "முடிந்தது என்று சொல்லி" (யோவான் 19:30). 

7.இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்;(லூக்கா 23:46)

Comments